அறிவுக்கு எட்டாத ஸ்நேகம்
arivukku ettaadha snegam
அறிவுக்கு எட்டாத ஸ்நேகம் தெய்வ ஸ்நேகம், நித்ய ஸ்நேகம் அளவுகள் இல்லாத ஸ்நேகம் தெய்வ ஸ்நேகம், நித்ய ஸ்நேகம்
ஏதொரு மேன்மைகளும் யாதொரு தகுதிகளும் இல்லாமல் ஸ்நேகிக்கும் இயேசு என் தெய்வம்
1. தேவனை நான் மறந்தாலும் ஆதி ஸ்நேகத்தில் நான் குறைந்தாலும் கால்கள் சறுக்கிட, கதறி கூப்பிட கரம் பற்றி தூக்கினீரே என்னை ஓர் மகனாய் கருதி
2. அன்னை என்னை வெறுத்தாலும் தன் கருவில் கொல்ல நினைத்தாலும் தாயின் கருவிலும் சேதமணுகாமல் கருத்தாய் பாதுகாத்தீர் என்னை ஊழியனாய் நிறுத்த
3. நல்லோரெல்லாம் முள்ளாகி என் ஸ்நேகிதரும் பகையாகி பாதி ராவினில் பதறி விழிக்கையில் இயேசுவே உடனிருந்தீர் என்னை ஸ்நேகிதனாய் கருதி
4. வேதத்தில் தான் மகிழ்ந்திருப்பேன் அது இல்லையென்றால் அமிழ்ந்திருப்பேன் ஏற்ற வேளையில் தேற்றும் வார்த்தைகள் ஊற்றாய் சுரந்ததுவே என்னை இறுதி மட்டும் நிறுத்த