அறிவுக்கு எட்டாத காரியம் செய்யும்
arivukku ettaadha kaariyam seyyum
அறிவுக்கு எட்டாத காரியம் செய்யும் ஆண்டவர் இயேசுவை ஆராதிப்போம்
ஆராதிப்போம் ஆராதிப்போம் ஆண்டவர் இயேசுவை ஆராதிப்போம் ஆராதிப்போம் ஆராதிப்போம் ஜீவனுள்ள தேவனை ஆராதிப்போம்
1.செங்கடல் இரண்டாக பிளந்ததுவும் தேவஜனம் அதிலே நடந்ததுவும் - 2 ஜலமே மதிலாய் நின்றதுவும் நம் அறிவுக்கு எட்டாத காரியமே
2.யோர்தான் இரண்டாக பிளந்ததுவும் துதியினால் எரிகோ தகர்ந்ததுவும் கன்மலை தண்ணீரை தந்ததுவும் நம் அறிவுக்கு எட்டாத காரியமே
3.பரலோக தேவன் பூமியிலே கன்னியின் மகனாய் பிறந்ததுவும் மரித்து மூன்றாம்நாள் உயிர்த்ததுவும் நம் அறிவுக்கு எட்டாத காரியமே