அறிவுக்கு எட்டாத அன்பு
arivukku ettaadha anbu
அறிவுக்கு எட்டாத அன்பு என் இயேசுவின் அன்பு அளந்திட முடியாத அன்பு என் இயேசுவின் அன்பு - 2 பாவிக்காய் ஜீவனை இழந்த அன்பு பாரசிலுவையை சுமந்த அன்பு இது ஈடற்ற இணையற்ற இதயத்தின் அன்பு -2 என் இயேசுவின் அன்பு
மாறாத அன்பு மறவாத அன்பு தீராத அன்பு திகட்டாத அன்பு இது குறையாத அன்பு மறையாத அன்பு கடல் வற்றி போனாலும் வற்றாத அன்பு என் கர்த்தரின் பேரன்பு
நிஜமான அன்பு நீடித்த அன்பு உயிரான அன்பு உறவான அன்பு இது அணைக்கின்ற அன்பு நினைக்கின்ற அன்பு ஆகாயம் அழிந்தாலும் அழியாத அன்பு என் ஆண்டவர் பேரன்பு