அர்பணித்தேன் உந்தன் பாதத்தில்
arbanithen undhan paadhathil
அர்பணித்தேன் உந்தன் பாதத்தில் தருகிறேன் தூய பலியாக என் ஆத்துமா உம்மை பற்றிக்கொள்ளும் வறண்ட நிலம் போல் காத்திருக்கும் உதவிடும் கன்மலை நீர் நம்பினோர்க்கு அடைக்கலம் நீர்
உந்தன் பிரசன்னம் எந்தன் வாஞ்சையே உந்தன் பிரசன்னம் ஒன்று போதுமே உந்தன் பிரசன்னம் எந்தன் மறைவிடம் உந்தன் பிரசன்னம் ஒன்று போதுமே
ஆயிரம் நாட்களை பார்க்கிலும் உம்மோடு ஒரு நாள் மகிழ்ச்சியே உம் இல்லத்தில் பேரின்பமே என் இன்னல்கள் யாவும் நீங்கிடுதே
ஆயிரம் மேன்மை எனக்கிருப்பின்னும் உம் மேன்மை பாடுவதென் பெருமையே ஆயிரம் நாவுகள் போதாதையா உம் புகழை நான் பாடிடவே
மலைகள் உருகிடும் எந்தன் இன்னல்கள் இனிதாகிடும் பெலவீனங்கள் நீங்கிவிடும் வாழ்க்கை புதிதாய் மாறிடும் உந்தன் பிரசன்னம் ஒன்றே என் பெலனே நான் உம்மில் என்றும் சார்ந்திடுவேன்