அரவணைக்கும் கரங்கள்
aravanaikkum karangal
அரவணைக்கும் கரங்கள் ஆண்டவரின் கரங்கள் அவனியில் மாந்தரை மீட்டிடும் இயேசு வல்லவரின் கரங்கள்
அந்தகன் கண்களில் ஒளியை தந்து உதவினார் தீராரோகியின் குஷ்டத்தை தேவன் இரங்கி நீக்கினார்
அற்பதம் அதிசயம் அனைவரும் கூடிப் போற்றுவோம்
கானானின் தண்ணீரை திராட்சைரசமாய் மாற்றினார் மீளா மரணம் தழுவிய யவீரு மகளை உயிர்பித்தார்