அரசே வருவீர்
arasae varuveer
அரசே வருவீர் - எங்கள் மனது மகிமையிலே நிதமும் மகிழ்ந்திட
1. அரசர் போர் குமாரனும் இவரே அம்புவியடர்ந்த திராட்சையும் இவரே வெம்பிடு வோர்க்கு வேருற விவரே விந்தை யாதாரமே சுந்தர பரமே - அரசே
2. துன்பம் துயரம் தொடர்ந்திடும் நேரம் தோன்றிடும் தாபனக் கிருபை பிரகாசம் இன்பம் தரும் என் இயேசுவின் நேசம் இறையாரருளே வரையாள் துரை - அரசே
3. பாதகர் பகடி செய்திடும் விலை பக்தருக்காக கொடுத்தீர் தோலை பரிசுத்தரானத் தொலைத்தீரோ அலகை பரலோக சுகம் பாரி லெமக்கீய - அரசே
4. சங்கீத மேளம் எங்கும் முழங்க சாலேமின் ராஜ்யம் நீடூழி வாழ்க! பொங்கும் வந்தது பூமியில் யாம் மகிழ புவியாரணமே எமக்காருயிரே - அரசே
5. அல்லல் தொலைக்கும் செல்வக்குமார் உலகை அடக்கும் அற்புத வீரா அல்லேலூயா துதி ஆண்டவருமக்கே அடியாருமையே அடிபணிந்தோமே - அரசே