அப்புறம் போகிறவர் போல
appuram pogiravar pola
அப்புறம் போகிறவர் போல காணப்பட்டாலும் - இயேசு (2) உன் மீது நோக்கமாயுள்ளார் உன் நினைவெல்லாம் அவர் அறிவார் (2) காக்கின்றவர் உருவாக்கின்றவர் தோளின் மேல் சுமக்கின்றவர் (2)
1.மோரியாவில் ஆபிரகாமை - அவர் காணாதவர் போல் இருந்தார் (2) ஈசாக்குக்கு மறு வாழ்வளித்து பலுகி பெருக செய்தார் (2)
2.கப்பலின் அடிதட்டினில் - அவர் காணாதவர் போல் அயர்ந்தார் (2) எழுந்து வந்தார் அதட்டி சென்றார் அக்கரை கடந்து சென்றனர் (2)