அப்பா உங்க மடியினிலே
appaa unga madiyinilae
அப்பா உங்க மடியினிலே நான் தலை சாய்க்கனுமே அன்பு முகம் கண்டு உம்மை ஆராதிக்கனுமே
உங்க தோல் மீது சாயனுமையா ஒரு தோழன் போல பேசனுமையா
யாபோக்கு நதிக்கரையில் யாக்கோபை போல நானும் போராடி ஜெபிக்கனும் உந்தன் கரம் தொடும் மட்டும்
உந்தன் பாதம் அமர்ந்திருந்த மரியாளை போல நானும் உம் வசனம் கேட்கணும் உந்தன் வழி நடக்கனும்
தனிமையின் நேரத்தில் தாவீதைப் போல நானும் உம்மை நான் ஆராதித்து உயர்த்திய மகிழனும்