அப்பா உம் முகம் பார்க்கணும்
appaa um mugam paarkkanum
அப்பா உம் முகம் பார்க்கணும் உம்மை போல மாறணும் உம்மை போல பேசணும் உம்மை போல வாழணும்
எனக்கு இந்த உலகத்தில் யாருமில்ல உம்மையல்லாமல் இங்கே எதுவுமில்ல உம்முகம் மட்டும் எனக்கு பார்க்கணும் உம்மை போல நானும் மாறணும்
1. உமக்கு பின்னே வர விருப்பமையா உலகமும் இங்கே என்னை இருக்குதையா இரண்டிலும் நெருக்கப்பட்டு மனம் நோகுது உமக்கு பின்னே என்னை இழுத்துக் கொள்ளும்
2. உமது வழிகள் என் வழிகளைய்யா உமது மொழிகள் என் மொழிகளைய்யா அவைகள் இரண்டுமே என் துதிகளைய்யா பரலோக வாழ்வு எனக்கு போதுமைய்யா
3. எனது கண்ணிமைகள் மூடும் முன்னே உமது வேலையை நான் செய்திடணும் எனது வாஞ்சை உந்தன் சித்தம் செய்ய அனுதினம் உம் கிருபையை தந்திடுமே