அப்பா சமூகத்தில் எப்போதும்
appaa samoogathil eppodhum
அப்பா சமூகத்தில் எப்போதும் ஆனந்தம் அப்பா உம் பிரசன்னத்தில் எப்போதும் பேரின்பம் -2
ஆடி பாடி உம்மை நான் துதிப்பேன் நடனம் ஆடி உம்மை நான் துதிப்பேன் -2
1. வல்ல பெரிய காரியம் செய்தார் வலக்கரம் பிடித்தென்னை தாங்கிடுவார் அறிவுக்கு எட்டாத நன்மைகள் செய்தார் ஆரோக்கியம் எனக்கு வரப்பண்ணினார் -2
பல்லவி
ஆ என்ன ஆனந்தம் அப்பா உம் சமூகம் ஆ என்ன பேரின்பம் அன்பரின் பிரசன்னம் -2
2. நினைப்பதற்க் அதிகமாய் செய்திட்டவர் நிர்முலம் ஆகாமல் காத்திட்டவர் -2 எதிர் பார்த்த நன்மைகள் வரப்பண்ணினார் நினையாத நன்மைகள் செய்து முடித்தார் -2
பல்லவி
ஆ என்ன ஆனந்தம் அப்பா உம் சமூகம் ஆ என்ன பேரின்பம் அன்பரின் பிரசன்னம் -2
3. எல்லைகள் பெருக செய்திடுவார் புதிய காரியங்கள் தோன்ற செய்வார் சொன்னது எல்லாமே செய்திடுவார் செய்த பின்னும் விட்டு விலகமாட்டார் -2
பல்லவி
ஆ என்ன ஆனந்தம் அப்பா உம் சமூகம் ஆ என்ன பேரின்பம் அன்பரின் பிரசன்னம் -2