அப்பா பிதாவே உம்மை
appaa pidhaavae ummai
அப்பா பிதாவே உம்மை ஆராதிக்கிறேன் அதிசயமானவரே ஆராதிக்கின்றேன் அற்புதங்கள் செய்பவரே ஆராதிக்கின்றேன் அடைக்கலமானவரே ஆராதிக்கின்றேன்
ஆதிமுதல் ஆனவரே ஆராதிக்கின்றேன் ஆசீர்வதிக்கின்றவரே ஆராதிக்கின்றேன் ஆவியான தேவனே ஆராதிக்கின்றேன் ஆத்துமாவை தேற்றுபவர் ஆராதிக்கின்றேன்
அல்பா ஒமேகா உம்மை ஆராதிக்கின்றேன் அரணான கோட்டையே நான் ஆராதிக்கின்றேன் அநாதி தேவனே ஆராதிக்கின்றேன் அல்லேலூயா என்று கூறி ஆராதிக்கின்றேன்
இரட்சண்யத்தின் கொம்பே உம்மை ஆராதிக்கின்றேன் என் பாத்திரத்தின் பங்கே உம்மை ஆராதிக்கின்றேன் என் பட்சத்தில் இருப்பவரே ஆராதிக்கின்றேன் என்னை பாதுகாப்பவரே உம்மை ஆராதிக்கின்றேன்