அப்பா என்னை பிழைக்க செய்தீர்
appaa ennai pizhaikka seydheer
அப்பா என்னை பிழைக்க செய்தீர் துளிர்க்க செய்தீர் என்னை தாங்கிடுவீர் வழி நடத்திடுவீர் நீர் மாத்திரம் போதும் என்னை வழிநடத்த நீர் மாத்திரம் போதும் என்னை உயர்த்தி வைக்க
அந்தத்தில் உள்ளதை ஆதிமுதல் செய்யப்படாததை பூர்வ முதல் அறிந்தவர் நீர் தானையா உங்க ஆலோசனை தான் நிலைநிற்குமே உமக்கு சித்தமானதை எல்லாம் செய்திடுமே
மரணத்தை ஜெயமாக வென்றவராம் மரித்தோரை உயிர்ப்பிக்க வல்லவராம் அதிகாரம் உடையவராம் வானம் பூமியாவும் உங்க கிரியை அன்றோ நம்பி வந்தோர்க்கு நீர் சொந்தமன்றோ
நிகரே இல்லாத நாமம் ஒன்று அந்த நாமத்தின் மேல் விடுதலை உண்டு இயேசு என்னும் நாமம் அது அந்த நாமம் சொல்ல நம்மை அழைத்தவராம் அதை சொல்ல சொல்ல பதில் தருபவராம்