அப்பா அப்பா உம் தோள்மீது
appaa appaa um tholmeedhu
அப்பா அப்பா உம் தோள்மீது நான் சாய்ந்து கொண்டேன் - 2 அன்பு கரங்களால் அணைத்து கொண்டீரே - உம் - 2 ஆற்றினீரே என்னை தேற்றினீரே - 2
அழகு ரோஜா நீர் என்னாத்ம நேசர் நீர் லீலி மலரும் நீர் என் இதய ராஜா நீர் - 2 உம்மோடு உறவாட உம் பாதம் தேடி வந்தேன் என்னை நீர் வனைந்து கொள்ளும் என் இயேசு ராஜாவே
யாக்கோபின் தேவன் சேனைகளின் கர்த்தர் நீர் பூமியின் குடிகளை ஆளுகை செய்கிறீர் - 2 உம்மோடு உறவாட உம் பாதம் தேடி வந்தேன் என்னை நீர் வனைந்து கொள்ளும் என் இயேசு ராஜாவே
யூதாவின் சிங்கமே தாவிதின் மைந்தனே இரக்கத்தின் சிகரமே சிலுவையின் நாதனே - 2 உம்மோடு உறவாட உம் பாதம் தேடி வந்தேன் என்னை நீர் வனைந்து கொள்ளும் என் இயேசு ராஜாவே