அப்பா அப்பா இயேசப்பா
appaa appaa iyesappaa
அப்பா அப்பா இயேசப்பா உந்தன் பிள்ளை நானப்பா கவலை எனக்கு இல்லப்பா-2
காக்கும் தெய்வம் என்றும் நீர்தானப்பா கலங்கிட தேவை இல்லை நான்தானப்பா - 2
1. பிறந்திட்ட நாள் முதல் பாதுகாத்து வந்தீரே கவலை கண்ணீர் எல்லாம் மாற்றிவிட்டீரே - 2 தள்ளாடி நடந்த என்னை தாங்கி கொண்டீரே தகப்பனை போல என்னை தோளில் சுமந்தீரே - 2
2. அப்பத்தையும் மீனையும் கொடுக்கும் நல்ல தகப்பனே பசியும் தாகம் எல்லாம் நீக்கி விட்டீரே - 2 அப்பா பிதாவே என்று அழைத்திடும் உரிமையை எனக்கு தந்தீரே - 2