அப்பா அப்பா அப்பா இயேசப்பா
appaa appaa appaa iyesappaa
அப்பா அப்பா அப்பா இயேசப்பா எங்கள் ஜீவனுள்ள தேவன் நீங்க அப்பா -(2) நிலையான வாழ்வும் நித்திய ஜீவனும் நீர் தானே எங்கள் இயேசப்பா -(2) அப்பா அப்பா அப்பா
1) யாரும்இல்லை என்போருக்கு அடைக்கலம் திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பனும் நெரிந்து போன நாணலுக்கு திட பெலன் மங்கி எரியும் திரிகளுக்கு அபிஷேகம் (நீர் தானே எங்கள் இயேசப்பா) -(2) அப்பா அப்பா அப்பா
2) ஆராய்ந்து முடியாத பெரிய காரியம் எண்ணி எண்ணி முடியாத அதிசயம் ஏற்ற ஏற்ற வேளையில் ஆகாரம் ஏங்கி நிற்கும் அனைவருக்கும் கொடுத்திடும் (இரக்கம் உள்ள எங்கள் இயேசப்பா) -(2) அப்பா அப்பா அப்பா
3) ஆபத்து காலத்தில் அணுகூலம் அப்பா அப்பா என்போருக்கு ஆரோக்கியம் நம்பி நம்பி வந்தவருக்கு சந்தோஷம் நாடி நிற்கும் அனைவருக்கும் நல்கிடும் ( மனதுருக்கம் உள்ள எங்கள் இயேசப்பா) -(2) அப்பா அப்பா அப்பா