அனுப்பபட்டவனே
anuppabattavanae
அனுப்பபட்டவனே நீ அனுப்பபட்ட காரியதை நிறைவேற்றிடு உன் பிரயாசங்கள் ஒருநாரும் வீணாவதில்லை (2)
1. பெரிய பர்வதமே எம்மாத்திரம் சம பூமி ஆவாய் நீ அனுப்பபட்டவன் முன் உந்தன் கையாலே தொடங்கப்பட்டதை (2) உந்தன் கையாலே முடித்து தீர்ப்பாரே (2)
2. குடும்பத்திலே (தேசத்திலே) உன்னை ஒதுக்கி வைத்தாலும் உன்னை காண்கின்ற ஒரு தேவன் உண்டல்லோ இகழ்வோர் மத்தியில் உன்னை உயர்த்துவார் (2) உந்தன் தலையை நிமிர செய்வாரே(2)
3. சிங்க கெபியிலே தனிமை பட்டாலும் தூதனை அனுப்பி உன்னை பாதுகாப்பாரே உனக்கு எதிராக திறக்கும் வாய்களை தமது வல்லமையால் அடைத்துப் போடுவார்
4. உறுதியாய் நிலைத்திரு தளர்ந்து போகாதே விசுவாச பரீட்சைகள் உனக்கு வரும்போது முடிவிலே மகிமையாக கணக்கிடப்படும் அதுவே நீதியாக எண்ணப்படும்
5. சீக்கிரம் வருவார் அவர் மேக மீதிலே உனக்கான கிரீடங்களை இயேசு தருவாரே தளர்ந்திடாமல் அவர் சித்தம் செய்திடு ஜீவ கிரீடத்தை உனக்கு தருவாரே
அழைக்கப்ட்டவன் நான் நான் அழைக்கப்ட்ட காரியத்தை நிறைவேற்றுவேன் என் பிரயாசங்கள் ஒருநாளும் வீணாவதில்