அனுக்கிரக காலம் இதுவே
anukkiraga kaalam idhuvae
1. அனுக்கிரக காலம் இதுவே அடைந்திடுவேன் என் இயேசுவை கிருபையின் காலம் இதுவே பின்பற்றுவேன் என் இயேசுவை
குற்றுயிராய் கிடக்கும் மனிதனை பார்த்து ஒதுங்கி போகமாட்டேன் நல்ல சமாரியன் இயேசு போல் உதவி செய்ய ஓடுவேன்
ஹா அல்லேலூயா ஹாலேலூயா ஹா அல்லேலூயா
2. ஆபத்து நாளில் அலறாமல் மனிதனை தேடி போகாமல் அடைக்கலப் பட்டணம் இயேசுவாம் அவரிடம் வந்து சேருவேன்
3. இவ்வுலக பாடுகள் சமமல்ல வரப்போகும் மகிமைக்கு ஒப்பிட உண்மை உத்தம சாட்சியாய் இயேசுவின் வருகையை நோக்குவேன்