அனுதினமும் அவர் சமுகத்திலே
anudhinamum avar samugathilae
அனுதினமும் அவர் சமுகத்திலே ஆனந்த பலியிடுவேன் துதித்திடுவேன் கீதம் பாடிடுவேன் மகிமையின் தேவனையே-2 கர்த்தர் என் வெளிச்சம் இரட்சிப்புமானார் யாருக்கும் பயம் இல்லையே-2 அவரே என் ஜீவனின் பெலனானார் மகிழ்வுடன் பாடி துதித்திடுவேன்-2
சத்துருக்கள் என்னை பகைத்தாலும் பொல்லாதவர் நெருக்கினாலும்-2 என்ன யுத்தம் எழும்பினாலும் நம்பிடும் தேவன் ஜெயமளிப்பார்-2
கேட்டதை தேடுவேன் அதை நாடிடுவேன் கண்டடைவேன் மகிமை நீங்காது அவரது சமுகத்திலே நிலைத்து நானும் துதித்திடுவேன்