அண்ணே என் பொன்னண்ணே
anne en ponnanne
அண்ணே என் பொன்னண்ணே மோட்சம் போகும் முன்னே தடை உண்டு பண்ணும் விஷயம் உலகத்தில் உண்டண்ணே அக்கா என் செல்லக்கா கவனமாதான் கேளக்கா சாத்தானின் இடறல் தாண்டி மோட்சம்தான் போகணுமக்கா
கண்ணோடு கண்ணும் வச்சு பலபாவம் செஞ்சென்னா அந்தக்கண்ணு மோட்சம் போகாது அத புரிஞ்சுக்கோடே ஒத்தக்கண்ணனா மோட்சம் போகலாம் இயேசப்பாவோட நீ நித்தியம் வாழலாம் நரகம் வேண்டாம் தைய்யரதையா தைய்யாதைய்யா நரகம் வேண்டாம்
கையோடு காலும் வச்சு பலபாவம் செஞ்செண்ணா அந்த தேகம் மோட்சம் போகாது அத தறிச்சுப் போடு ஊனனாக நீ மோட்சம் போகலாம் இயேசப்பாவோடே நீ நித்தியம் வாழலாம் நரகம் வேண்டாம் தைய்யரதையா தைய்யாதைய்யா நரகம் வேண்டாம்