அன்னை தந்தையாய் அன்பு காட்டிடும்
annai thandhaiyaay anbu kaattidum
அன்னை தந்தையாய் அன்பு காட்டிடும் ஆண்டவரே எங்கள் இயேசுவே உம்மைத் தவிர துணை யாருமில்லையே ஆண்டவரே எங்கள் இயேசுவே (2)
உலகில் வாழ்கின்ற உயிர்களுக்கெல்லாம் உறு துணை நீரே இயேசுவே நல்மேய்ப்பராய் நாளும் வழிகாட்டும் மீட்பரே எங்கள் இயேசுவே
கல்வி செல்வமும் நல்ல உள்ளமும் கர்த்தரே எமக்கு தந்திடுவீர் சின்னப்பிள்ளைகள் சேர்ந்துப் பாடிடும் அன்பு பாடலை கேட்டிடுவீர்
பல்லவி
அன்னை தந்தையாய் அன்பு காட்டிடும் ஆண்டவரே எங்கள் இயேசுவே உம்மைத் தவிர துணை யாருமில்லையே ஆண்டவரே எங்கள் இயேசுவே
வானமும் பூமியும் காற்றையும் நீரையும் உலகில் படைத்தீர் இயேசுவே வண்ண மலர்களும் பசுமை மரங்களும் கண்ணைப் பறிக்குது இயேசுவே
இத்தனை அழகும் இயற்கை வளமும் எல்லாம் படைத்த உலகிலே எம்மையும் படைத்த உமக்கு நன்றிகள் ஏற்பீர் எங்கள் இயேசுவே
பல்லவி
அன்னை தந்தையாய் அன்பு காட்டிடும் ஆண்டவரே எங்கள் இயேசுவே உம்மைத் தவிர துணை யாருமில்லையே ஆண்டவரே எங்கள் இயேசுவே