அன்னை மா மரியின்
annai maa mariyin
அன்னை மா மரியின் அமலன் இயேசு பாலன் நன்றே அவதரித்தார் நமக்காக இந்நிலமேல் அன்னை மா மரியின்
1. மனித பாவம் போக்கவே மானுவேலனாய் உதித்தார் புனித குமாரன் இயேசுவை புகழ்ந்து போற்றித் துதிக்கிறோம் தன் மகிமையைத் துறந்து தாழ்மைக் கோலம் எடுத்து கந்தைதனை பொதிந்தே கர்த்தர் பசும் புல்லணையில்
2. உன்னதத்தில் மகிமையும் உலகிலே சமாதானமும் மனிதர் மேல் பிரியமும் உண்டாவதாக என்றே விண்ணின் தூதர் சேனைகள் வானின்று முழக்கமுடன் மனுக்குமாரன் இயேசுவை மண்ணோர் கேட்கத் துதிக்கிறார்