அணி அணியாம்
ani aniyaam
அணி அணியாம் தூதருடன் பொன் மணிபோல் துலங்குவாரே
1. தூதர் நாதம் எங்கு முழங்க தூய ரெல்லாம் ஒன்று குழும (கூட) துங்கன் இயேசுவின் இன்ப முகத்தை கண்டு நாமும் மகிழுவோம் - அணி
2. மண்ணின் சாயல் மாறி நாமும் அண்ணல் இயேசு சாயலடைவோம் விண்ணில் நமக்காக பணிந்த மனையில் மன்னனோடு வாழுவோம் - அணி
3. முத்து வாசல் ஏறிச் செல்வோம் முத்தம் செய்வோம் பெண்ணின் பாதம் அத்தன் நம்மை அறிந்த அன்பால் தெரிந்து களிப்போம் அவரின் - அணி
4. அந்த நாளை எப்போ காண்போம் சுந்தரனை என்று சேர்வோம் அந்தமில்லா அன்பிளாக் கண்டு மகிழ்வோம் நிறைவுடன் - அணி
5. நித்தியமே எந்தன் உரிமை நிறுத்தினார் சுத்த உருவாய் நீசன் நானே என் செய்வேனோ நீடுழியாய்ச் சேவிப்பேன் - அணி