அந்தோ அலைந்திடும் மாந்தருக்காய்
andho alaindhidum maandharukkaay
அந்தோ! அலைந்திடும் மாந்தருக்காய் அந்த கேடடைந்தே தொங்குகின்றார் கல்வாரி சிலுவையில் ஆஹா! கர்த்தரின் அன்பிதுவே
கடுங்காயம் கொடுங்கோர ஓடி வரும் இரத்த வெள்ளம் காடிபானம் கசந்தேற்கும் அன்பிதுவே
வாரடிபட்டதாம் தேகமெல்லாம் கூராணி ஈட்டியும் பாய்ந்தனவே பாசஞ்சுமந்தார் பாவங்கள் ஏற்றார் நேராய் சிலுவையில் மாண்டனரே .
வெள்ளி, பொன் அழிவுள்ள பொருளாலுமல்ல வெள்ளாடு இளங்காளை பலியாலுமல்ல குற்றமில்லாத மாசற்ற தான ஊற்றாம் தம் ரத்தத்தால் மீட்டெடுத்தார்.
சிற்றின்ப சேற்றினில் சிக்கினாலா பெற்றிடுவாய் சாபம் அல்லோ முற்றிலும் தள்ளும் நாச நரகம் பற்றிடுவாயே சிலுவையை.
உன் நெஞ்சின் போக்கும் கண்ணின் காட்சியும் உன் வாலிபம் பூரிப்பாகட்டுமே இன்றே அறிவாய் ஆக்கினை அடைவாய் அன்பின் சிலுவை நிக்கிடுவாய்.