அன்புள்ளகள் இங்கே
anbullagal ingae
அன்புள்ளங்கள் இங்கே கூடுது - அந்தக் கன்மலையைத் தான் தேடுது ஆண்டவர் நாமத்தைப் பாடுது - அவர் அண்டையிலே வந்து சேருது
வேதத்திலே மனம் சேருது - வேத நாயகனைத்தான் தேடுது (2) பேரின்பப் போதனை தந்தவரை - தினம் நன்றியினால் துதி பாடுது (2)
தேவனின் பிள்ளைகள் ஆகிட - இவர் நெஞ்சங்கள் இங்கே ஏங்குது (2) வாருங்கள் இயேசுவின் பாதத்தில் - ஜென்ம சாபங்கள் தீர்ந்திடும் வேதத்தில் (2)
பாவங்கள் போக்கிடும் தேவனை - இங்கு பார்;த்திடக் கண்கள் ஏங்குது (2) வாருங்கள் இயேசுவின் பாதத்தில் - ஜென்ம சாபங்கள் தீர்ந்திடும் வேதத்தில் (2)
நித்திய ஜீவனை நாமடைய - அந்தச் சத்திய நாதனை நாடுவோம் (2) கேட்பதைத் தந்திடும் தேவனிடம் - எங்கள் கேட்டினை இரட்சிக்கப் பாடுவோம் (2)