அன்புள்ள நேசரே இயேசு
anbulla nesarae yesu
அன்புள்ள நேசரே இயேசு எனக்கெல்லாம் அவரே பதினாயிரம் பேர்களில் சிறந்தவர் அவர் பள்ளத்தாக்கின் லீலி எனக்கெல்லாம் அவரே என் ஆத்துமத்தின் பிராண நாயகர்
துக்கத்தில் என் ஆறுதல் துன்பத்தில் எனதின்பம் என் கவலைகளெல்லாம் தாங்குவார் அவர் பள்ளத்தாக்கின் லீலி அவர் காலை விடிவெள்ளி பதினாயிரம் பேர்களில் சிறந்தவர்
என் சஞ்சலங்கள் நீங்க என் பாவம் மா அன்பாய் சுமந்து அவர் ஜீவனை விட்டார் நான் யாவையும் வெறுத்தேன் என் நேச மீட்பர்காய் அவர் ஒரு போதும் கை விடமாட்டார் லோகம் என்னை வெறுத்து சாத்தான் சோதித்தாலும் மீட்பர் எனக்கு ஜெயம் தருவார்
கர்த்தாவின் சித்தத்துக்கு கீழ்ப்படிவேனானால் எல்லா துன்பத்தையும் ஜெயிப்பேன் எனக்கு பயமென்ன அவர் என் பங்கானார் என் ஆத்துமத்தின் மன்னா இவரே ஜீவ நதிகள் பாயும் ராஜ்யத்தை சேர்க்கையில் அவர் திரு முகத்தை நான் காண்பேன்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F F A# F F G C7 F A# F C F F A# C Dm F G C7 F A# F C F F A# F F G C7 F A# F C F A# F F G C7 F A# F F G C7 F A# F G C7 F A# F C F