அன்புள்ள மானிடனே
anbulla maanidanae
அன்புள்ள மானிடனே உன் அறிவுக்கு வேலை கொடு ஆண்டவர் இயேசுவிடம் உன் உள்ளத்தைக் கொடுத்துவிடு
அழைக்கின்ற தெய்வம் இவர்போல இந்த உலகத்தில் கிடையாது
அடைக்கலம் கொடுக்கின்ற தெய்வமவர் அவர் அண்டையில் சென்றுவிடு
மானிடன் செய்யா வித்தையினை இவர் செய்தே காட்டியவர்
மரித்தபின் உயிர்த்த தெயவமென்று இவர் மகிமையைப் பாடிவிடு
உன்னைப் போலவே பிறர்மீதும் நீ அன்பினைக் காட்டிவிடு
இதுவே இயேசுவும் விரும்புவது என்று இன்றே மனந்திரும்பு
உள்ளத்தில் இருக்கும் தேவனுக்கு உன் உடம்பே ஆலயமாம்
அந்த உடலினை வீணே கெடுக்காதே உன் பழக்கத்தை மாற்றிவிடு