அன்புள்ள இயேசையா
anbulla iyesaiyaa
அன்புள்ள இயேசையா உம்மை மறந்தே போவேனா மெய்யான உம் அன்பினை இனி பாடாமல் இருப்பேனா
1. பெற்றோர் என்னை தள்ளினும் மற்றோர் எனனை கைவிட்டும் தள்ளிடாமல் ஜீவ வார்த்தையினால் தேற்றி அணைத்தீரையா ஆஆ..
2. கள்ளன் என்னை மாற்றவோ-நீர் கள்ளன்போல் தொங்கினீரோ கால்களில் கைகளில் ஆணிகள் பாய்ந்தது கர்த்தா எனக்காகவோ
3. பாழான உலகினிலே பாவ சேற்றினில் வாழ்ந்தேனையா பாசம் வைத்து என்னை தூக்கி மீட்டு மார்பில் அணைத்தீரையா
4. எப்போ வருவீர் தேவா-என் இக்குடிய உள்ளமும் ஏங்குதையா உம்மோடு வாழவும் உம்மில் மகிழவும் என் நெஞ்சம் ஏங்குதையா