அன்புக்குப் பாடல் பாடுவேன் நெஞ்சத்தில்
anbukkup paadal paaduven nenjathil
அன்புக்குப் பாடல் பாடுவேன் நெஞ்சத்தில் மன்னனை நாடுவேன் இன்பத்தின் ஊற்றே இயேசுவே - உன் இன்புகழ் பாடி மகிழ்ந்திடுவேன்
வேதனை ஆயிரம் நான் அடைந்தேன் அந்த வேளையில் ஊன்றுகோல் நீ தெரிந்தேன் ( 2 ) உயிரின் வார்த்தையே எந்தன் உள்ளத்தில் வாழுமே உன் நாமம் பாடுகையில் என் நாவும் ஒலித்திடுமே
கல்வாரி மலையில் உன்னுயிர் தந்ததும் எல்லோர்க்கும் வாழ்வாய் எழுந்ததுவும் ( 2 ) அன்பின் ஆட்சியாய் என்றும் இன்பத் தாழ்ச்சியாய் சொல்லில்லை கூறிடவே இசையில்லை பாடிடவே