அன்புடனே அருகினிலே
anbudanae aruginilae
அன்புடனே அருகினிலே அழைக்கிறார் அருள் நிறைவே தாங்கிடுவார் தயவுடன் தருணமே தள்ளிடாதே
1. கல்வாரி தனிலே காயங்கள் அடைந்த கர்த்தராம் இயேசு கனிவுடன் கலங்குவதேனோ கருணைப் பிரவாகம் கரமதை நீட்டியே சுகமீவாரே - அன்
2. பாவத்தினாலே சாபத்திற்காளாய் பாதை தவறி மாள்கையிலே பாவத்தை போக்கும் பலியாக வந்த பாவமில்லா தேவாட்டுக் குட்டி - அன்
3. மரணத்தின் கூரை மரணத்தால் வெல்ல மனுவாக வந்த மன்னவன் மா சாபம் நீங்க சாபமதாகி மானிடர்க்காகவே பிணையானாரே - அன்
4. வார்த்தை யுரைத்து வாதைகள் தீர்க்கும் வல்லவர் இயேசு நாமமே வாக்கு மாறா ரே போக்குவார் நோயை வந்திடுமே ஏற்ற நேரமிதே - அன்
5. ஆசைக்கிசைந்த இயேசென்னும் நேசரின் ஆவலுடன் அழைக்கிறாரே ஆதரை மீதில் ஆறுதல் செய்யும் அன்பின் பாதத்தை அண்டிடுமே - அன்