அன்பு பொழிந்தோனே
anbu pozhindhaeாnae
அன்பு பொழிந்தோனே எம்மை ஆதரிக்கும் தெய்வமே இறைமகன் ஆக வந்தே எங்கள் இன்னல் களைந்தவரே
இயேசப்பா ஸ்தோத்திரம் இறைமகனே ஸ்தோத்திரம்
நம்பிக்கை ஒளியைத் தந்தே நாதனே நல்வழி காட்டிவைத்தீர் உன்னதமானவரே உள்ளத்தில் ஒளிதர வேண்டி நின்றோம்
பேரின்பக் கன்மலையே எங்கள் கோட்டையும் நீரல்லவோ வானம் பூமி அழிந்தாலும் உமது வார்த்தைகள் அழிவதில்லை
அதிசயமானவரே உமது மகிமையைப் பாட வந்தோம் ஆண்டவரே உமக்காய் ஆரொகண சங்கீதம் பாட வந்தோம்