அன்பு கொண்ட மனிதனே
anbu konda manidhanae
அன்பு கொண்ட மனிதனே-உன்னை அழைக்கிறார் என் தெய்வமே இன்னல் காணும் இந்த உலகில் எந்த நன்மையும் இல்லையே
இங்கு காணும் இன்பம் யாவும் இடையில் தோன்றும் மாயையே
கல்லும் மலையும் கடந்து சென்றே கடவுளைக் காண முடியுமோ உள்ளும் புறமும் உனக்குள் வாழும் தெய்வத்தை நீ மறந்ததேன் எல்லையில்லா அன்பை நீயும் இயேசுவிடத்தில் காணலாம்
அல்லும் பகலும் அலைந்து உழைத்தும் மனதில் நிம்மதி இல்லையே
கொல்லும் துன்பம் எதையும் வெல்ல வல்ல தேவன் அழைக்கிறார் கள்ளமில்லா இயேசு அன்பை கண்டு நீயும் மகிழலாம்
மின்னல் போல மனித வாழ்வு இடையில் தோன்றி மறையுமே இன்று நீயும் மனந்திரும்பி மகிமை வாழ்வு அடையலாம் அண்ணல் இயேசு அன்புகூர்ந்து அருகில் உன்னை அழைக்கிறார்