அன்போடு வந்தோம் காணிக்கை தந்தோம்
anbodu vandhom kaanikkai thandhom
அன்போடு வந்தோம் காணிக்கை தந்தோம் கனிவோடு ஏற்பாய் ஆண்டவரே உம் பலியோடு சேர்ப்பாய் தூயனே ( 2 )
பொன்னான வாழ்வை புடமிட்டு வைத்தோம் பூவாக மணம் வீச வைத்தோம் ஆ - ( 2 ) புதிரான வாழ்வே எதிரானதாலே - 2 பொலிவாகச் செய்வாய் ஆண்டவனே உம் அருளோடு அணைப்பாய் மாபரனே
அருளான வாழ்வு இருளானதாலே திரியாக எமை ஏற்றி வைத்தோம் ( 2 ) திரியாகக் கருகி மெழுகாக உருகி - 2 பலியாக வைத்தோம் ஆண்டவனே புது ஒளியாக மாற்றும் தூயவனே