அன்பிற்காய் ஏங்கினேன்
anbirkaay enginen
அன்பிற்காய் ஏங்கினேன் அன்பையே தேடினேன் இவ்வுலகின் அன்பு எல்லாம் மாயையே என்று உணர்ந்தேன்-2 உம் அன்பே ஒன்று போதுமே இவ்வாழ்வில் மேலே உயர்ந்திட உம் அன்டே அன்பே ஒன்று போதுமே இவ்வுலகை நான் வென்றிட அனைத்திலும் மேலான அன்பு என் இயேசுவின் அன்பு கல்வாரியில் நான் கண்ட அன்பு-2
ஆகாத கல்லைப் போல் தள்ளப்பட்டேன் இவனால் ஆகாது என்று ஒதுக்கப்பட்டேன் உம் அன்பின் கரம் என்னை அணைத்ததே என்னை வாலாக்காமல் தலையாக்கினதே
தாயின் கருவில் என்னை அறிந்தவரே என் வாழ்வின் முடிவை குறித்தவரே உம் சித்தம் போல என்னை நடத்துமே என் வாழ்வை உம்மிடம் படைக்கிறேன் இன்றே