அன்பின் இயேசுவைப் போற்றி துதிப்போம்
anbin yesuvaip potri thudhippom
அன்பின் இயேசுவைப் போற்றி துதிப்போம் ஆனந்தம் கொண்டாடுவோம். பரமானந்தம் கொண்டாடுவோம் நம் காதல் அல்லவோ படுபாதகன் போல் பல பாடுக்குள் ஆனாரே ஆ ஆசையோடு அன்பின் மலரைக் தூவித் துதித்திடுவோம்
ஏக சுதனாம் இயேசுவையே ஈந்ததும் அன்பல்லவோ பரம் துறந்ததும் அன்பல்லவோ என் அன்பின் நாயகனே! படு பாதகனாம் என்னைத் தேடி நீர் வந்தீரோ! ஆ! சிநேகம், இது சிநேகம்! ஆர்ப்பரிப்போமே
லோகமே உன் ஆசை வேண்டாம், தூரமே போய்விடுவாய், வெகு தூரம் போய் விடுவாய்; என் இயேசு என் இன்பமே மிகமாட்சிமையாம் அதன் மேன்மையும் தான் பெரிய, பரி பூரணம் நின் சித்தம் செய்வேன் தினம் தினமே!
பாதையில் இயேசு தாம் துறந்தார் பார்தனில் மகிழ்ந்திடவே, இனிப் பரமனே டேகிடவே உம் இன்ப முகம் காண்பேன் அன்று ஆசையோடன்பரின் மார்பதில் மார்பில் அயர்வேனே ஆ நேசம் தான் மனம் மாறுதே படைப்பேன் என்னைத் தானே .
அன்பின் ஆட்சியாம் ஆயிரம் ஆண்டில், மணவாளனின் மாட்சிமையே மணவாட்டியின் பாக்கியமாம்! தம் ஆனந்த மகிழ் வாசமே மனப் பயம் இல்லாத ஆனந்தன் நகரே! ஆ எந்நாளும் என் இன்பமே ஏகிடுவேன்