அன்பின் விருந்தை அருந்திட இதோ
anbin virundhai arundhida idho
அன்பின் விருந்தை அருந்திட இதோ! ஆவலுடன் வாராய் - நேசா!
உன் பாவம் போக்கியுனை ரூடவ்டேற்ற உயிரளித்த விருந்தாம் - நேசா
1. உன்னைக் காக்க உருகியே என துயிரைத் தத்தம் செய்தேன் - வேறே என்னைப் போலுனக்குகந்த ரட்சகன் எங்கே காண்பாய் கூறாய்?
2. என்றுமே என்னை மறந்திடாமல் இருதயந் தனில் கொள்ளை - அன்பு குன்றிடாது குருசை நினைத்து நன்றியுடன் வாழ
3. ஒருவருக்கொருவர் அருமையாக ஒன்று கூடிவாழ - இந்தத் திருவிருந்தின் நோக்கமறிந்து சேர்வாய் அன்புகூர்வாய்
என்னைப் புசித்து என்னில் நிலைத்தால் என்றும் என்னால் பிழைப்பாய் - நீ முன்னை விளைத்த வெகு பாவம் போக மன்னிப்படைந் தாள்வாய்
5. திரும்பி நான் வரும் காலமளவும் தெரிவிப்பாய் என் மரணம் - அன்று அருமையான பரம விருந்தை அருள்வேன் உனக்கருள்வேன்