அன்பின் சொரூபியே
anbin soroobiyae
அன்பின் சொரூபியே - அருள் நிறை வள்ளலே இன்பமாய் போற்றுவோம் - இந்நேரமிதிலே
உன்னத அன்பே - ஒளி தரும் அன்பே உமதடி பணிந்து - போற்றுவோம் போற்றுவோம்
1. வந்திடுவீர் - வல்லமையாக வானவர் துாத - கணங்களுடனே பெந்தெகொஸ்தின் பெரும் - பேரு மாரி பிழிந்திடுவீரே - இக்கூட்டமிதிலே - அன்
2. மகிழ்திடுவோமே - மணவாளனோடு மணவாட்டியாம் திருச் - சபையோரெல்லோரும் ஆனந்தித்திடுவோம் - ஆர்ப்பரிப்போடு ஆகமகிழ்வோடு - ஆராதித்திடுவோம் - அன்
3. கட்டிக் கரும்பே - கருணைக் கடலே காருண்ய தேவனே - காத்திருக்கிறோம் ஊற்றும் அருள்மாரி - உம் திரு நாமம் மகிமையாய் பிரகாசிக்க - மானிடர் மத்தியில் - அன்
4. அழைக்கிறோமே நாம் - அக மகிழ்வுடன் அன்புடனே வாரும் - ஆசீர்வதிக்க இன்புற்று நாமும் - இராஜனுடனே இராப்பகல் ஓய்வின்றி - பாடித் துதிப்போம் - என்