அன்பின் ரூபி இயேசு தேவா
anbin roobi yesu devaa
அன்பின் ரூபி இயேசு தேவா அளித்திடும் திருக் கிருபையால்
இவ்வார தன் மீது வந்தருள் மழை பொழிந்திடும் - அன்
1. பாவிகள் மனதுருக வந்து பொழிந்திடும் பாடகர் உம்மண்டை வந்து பாவ மன்னிப்படைய - அன்
2. காலை கண்ட மானைப் போல காதல் உள்ளோர் தேடிட கானாவூர் கற்சாடி ஆரும் - திராட்சரசத்தால் நிறைந்தாற்போல்
3. ஆறிருபது தாசர்கள் ஆர்ப்பரித்து அன்று மே ஆவ்வாறோர் முறை நாங்களும் - திருவன்பினால் நிரம்பவே -அன்
4. சங்கு துலங்க கீதம் எழும்ப உம்பரர் துதித்திட எங்கும் பிரகாசமாய் எம்பிரா நீர் வந்திடும் - அன்
5. இங்கெழுந் தெழும்பதலடையச் செய்யும் இயேசுவே இன்றென்றும் அல்லேலுயா - ஓசான்னா புகழ் - அன்