அன்பின் ரூபி திவ்யானந்தம்
anbin roobi thivyaanandham
அன்பின் ரூபி திவ்யானந்தம் பாரில் ரூடவ்ய வந்தீரே! எங்கள் ஏழை நெஞ்சில் வாசம் பண்ணி மருள் தீர்ப்பீரே. யேசுவே நீர் பரிதாபம் அன்புமாய் இருக்கிறீர் பாரத்துக்கம் கொண்ட உள்ளம் வந்து தேற்றல் செய்குவீர்.
உமது நல் ஆவி தாரும் எங்கள் நெஞ்சு பூரிப்பாய் உம்மில் சார நீரே வாரும் சுத்த நேச வடிவாய் பாவ ஆசை எல்லாம் நீக்கி அடியாரை ரட்சியும் விசுவாசத்தைத் துவக்கி முடிப்பவராய் இரும்.
சர்வ வல்லவரே வாரும் நாங்கள் உமதாலயம் எங்களுக்குத் தயை தாரும் என்றும் விலகாதேயும் என்றும் உம்மை ஸ்தோத்தரித்து வானோர்ப் போலச் சேவிப்போம் குறைவற்ற அன்பைப் பெற்று ஓயாமலே துதிப்போம்.
நாங்கள் நித்ய வீட்டில் சேர்ந்து கறை திரை இன்றியே உந்தன் சாயல் பெற்று வாழ்ந்து தேவ அன்பில் மூழ்கியே எங்கள் க்ரீடம் உந்தன் பாதம் வைத்துப் போற்றும் வரைக்கும் நாதா அடியாரை நித்தம் மறுரூபமாக்கிடும்.