அன்பின் மயமே உமையே
anbin mayamae umaiyae
அன்பின் மயமே உமையே உமையே அண்டினேனே
ஆருயிர் உறவே! அரும் பெரும் துணையே! ஆறுதல் உமதண்டை - அன்பின்
1. ஒரு நாளேனும் உறங்கா துறங்கா தந்து காத்த உயிர் கொடுத்தனையே உயர்த்திட எனையே உயர்த்திட எனையுமக்கே - அன்பின்
2. இன்ப இசையே இறைவா இறைவா ஈந்து அணைத்தீர் இந்நிலவுலகில் இடர் புயல் வரினும் இன்பமே உந்தன் தொனியே - அன்பின்
3. நம்பினவரை தயவாய் தயவாய் தாங்கும் கரம் நாள் முழுவதிலும் நன்மையே தொடர் நன்றியுடன் துதிப்பேன் - அன்பின்
4. பதினாயிரம் பேர் தனிலும் தனிலும் அரிய அன்பே கதிதந்தெனையே கடைக் கணித்திடவே பாரினில் யாருமில்லையே - அன்பின்