அன்பின் தேவனை
anbin devanai
அன்பின் தேவனை துதித்திடுவேன் அல்லும் பகலும் நன்றியுடன் அவர் செய்த நன்மைகளை நினைத்து போற்றி மகிழ்ந்திடுவேன்
1. கடந்த நாட்களிலே கண்மணிபோலெம்மை காத்த தேவன் கருணையுடன் கடைசி வரை நடத்திடுவார்
2. கன்மலையும் எந்தன் மீட்பரும் அவரே பின் தொடர்ந்த சத்துரு சேனை பின்னிட்டோட முறியடித்தார்
3. பார் உருவாகு முன் பரத்தில் எந்தன் நாமம் வரைந்திட்ட கர்த்தர் இயேசுவையே வல்ல ஆவியால் பாடிடுவேன்
4. ஆதியில் நம்மையே நவசாலேம் சீயோனாக்க சிந்தை செய்தே ஆவியினால் அபிஷேத்தவ ரோடிணைத்தார்
5. மா ஜெயக் கீதம் பாடி மறுரூபமாய் ஆகாயத்தில் அவரைச் சேர்ந்தே ஆனந்தமாய் வாழ்ந்திடுவோம்