அன்பின் தேவா உம்மை
anbin devaa ummai
அன்பின் தேவா உம்மை துதிக்கின்றோம் அப்பா பிதாவே உம்மை ஆராதிக்கின்றோம் ஆவியானவரே உம்மை உயர்த்துகிறோம் அல்லேலூயா பாடி ஆர்ப்பரிக்கின்றோம்
1. சகலமும் படைத்த வல்லவரே நன்மைக்கும் ஊற்றுக்கும் காரணரே கிருபையும் சத்தியமும் நிறைந்தவரே ஆவியில் உண்மையில் ஆராதிக்கின்றோம்
2. ஆதியில் வார்த்தையாய் இருத்தவரே மாமிசம் உலகில் வந்தவரே பரிசுத்த ஆவியை பொழிபவரே பரிசுத்த பாதையில் நடத்துபவரே
3. மேகங்கள் நடுவில் வருபவரே எம்மையும் தம்முடன் சேர்ப்பவரே நித்திய ஜீவனை தருபவரே நீடித்த நாட்களாய் காப்பவரே