அன்பின் அபிஷேகமே
anbin abishegamae
அன்பின் அபிஷேகமே எந்தன் ஆருயிரே எந்தன் ஆரோக்கியமே எந்தன் ஆறுதலே உமக்கே ஸ்தோத்திரம் செலுத்துவேன் அன்பின் தேவனை போற்றுவேன்(ஆராதிப்பேன்)
1. பாலைவனமாய் இருந்தாலும் பாழான தேசமாய் இருந்தாலும் அபிஷெகம் வந்தால் பயிர்நிலமாகும் -2 பாலைவனமெல்லாம் செலிப்பாகும் – உமக்கே
2. இருளான பாதையில் நடந்தாலும் இல்லாத சூழ்நிலையாய் இருந்தாலும் அபிஷெகம் வந்ததால் வெளிச்சம் உதிக்கும் -2 ஆசீர்வாத மழை பெய்யும் – உமக்கே
3. முடியாத காரியமாய் இருந்தாலும் மூழ்கின் நிலையில் இருந்தாலும் அபிஷேகம் வந்தால் எல்லாம் கூடும் -2 உன் (என்) தலை உயர்த்தி மகிழ்விப்பார் – உமக்கே