அன்பின் ஆண்டவர் வருகை
anbin aandavar varugai
அன்பின் ஆண்டவர் வருகை வேகம் நெருங்குதே ஆத்தும ஆதாயம் செய்வோம் வேகம் வேகமே
அழிவுக்கு நேராய்விரைந்திங்கு செல்வோர் ஆயிரம் ஆயிரமாய் நம்முன் காணுதே அறியாதவர்போல் அமைதியாய் இருந்தாலோடு ஆக்கினை நம்மேல் வரும் வேகம் வேகமே
நோவாவின் காலம் போலவே மக்கள் விற்பதும் கொள்வதுமாகவே இன்றே ஆக்கினைக்கு நேராகவே விரைந்து செல்கின்றார் ஆவன செய்வீர் அதற்காய் வேகம் வேகமே
கெர்ச்சிக்கும் சிங்கம் போலவே சாத்தான் யார் யாரை விழுங்கலாமோ என்று நிற்கின்றான் அவன் தன் வலையில் சேர்க்கும் லோக மாந்தரை அன்பரின் ஆட்சியில் சேர்ப்போம் வேகம் வேகமே
எக்காள சத்தம் தொனித்திடும் வேளை ஏகமாய் யாவரும் ஏகிடுவோமே இயேசுவுக்காய் ஜீவிக்காதோர் அந்த நாளிலே ஏற்றுக் கொள்ளப்படார் என்போம் வேகம் வேகமே