அன்பில்லா உலகத்திலே
anbillaa ulagathilae
அன்பில்லா உலகத்திலே அன்பு காட்ட ஒருவரூண்டு என்றொன்றும் மாறாது என் இயேசு அன்பு உலகத்தில் மறையாதது - இந்த உலகத்தில் மாறாதது
பெற்ற தாயின் அன்பு ஒரு நாள் மறைந்து போகும் தோளின் மேல் சுமந்த தந்தை அன்பு ஒரு நாள் அழிந்து போகும் என்றொன்றும் மாறாது என் இயேசு அன்பு இகத்தினில் மறையாதது - இந்த உலகத்தில் மாறாதது
பிள்ளையின் அன்பொரு நாள் செல்லாமல் பிரிந்துவிடும் உறவினர் அன்பு ஒரு நாள் உன்னைவிட்டு பிரிந்துபோகும் என்றொன்றும் மாறாதது என் இயேசு அன்பு இகத்தினில் மறையாதது - இந்த உலகத்தில் மாறாதது
மனைவி அன்பு ஒரு நாள் சிரித்து கொண்டே மறைந்து விடும் கணவனின் அன்பு ஒரு நாள் உன்னை விட்டு பிரிந்து விடும் என்றொன்றும் மாறாதது என் இயேசு அன்பு இகத்தினில் மறையாதது - இந்த உலகத்தில் மாறாதது