அன்பிலே பூரணரே
anbilae pooranarae
அன்பிலே பூரணரே - எங்கள் ஆனந்த ரூபா அதிசய ராஜா அழகில் சிறந்தோனே - எங்கள் ஆசையின் கோமானே அஹா அஹா ஆனந்தம் அஹா அஹா ஆனந்தம் அன்னியராம் -அழைத்தணைத்தீரே
1. காத்தீரே கருணையுடன் - எம் கலக்கங்கள் நீக்கி கனிவுடன் தூக்கி கதியில்லா ஏழைகளின் பெரும் கவலைகளைப் போக்கி அஹா அஹா ஆனந்தம் அஹா அஹா ஆனந்தம் ஆறுதல் அளித்தீர் அனுதினம் துதிப்பேன் - அன்பிலே
2. ஆனந்தம் ஆனந்தமே - உம் ஆருயிர் ஈந்தீர் அவனியில் வந்தீர் அலகைதனை வென்றீர் - அவன் அடிமைகளை மீட்டீர் அஹா அஹா ஆனந்தம் அஹா அஹா ஆனந்தம் அல்லேலூயா பாடி அகமகிழ்ந்திடுவோம் - அன்பிலே
3. கோடையில் குளிர் தருவே - கடும் வாடையின்- மறைவே ஏழையின் உறவே கூடுவோம் திருப்பாதம் - தினம் பாடுவோம் அவர் கீதம் அஹா அஹா ஆனந்தம் அஹா அஹா ஆனந்தம் அன்பே, அன்பே, அன்னையின் மேலாய் - அன்பிலே
4. நித்திய பரிசுத்தரே - உம் வருகையில் அடியாரைப் பரிசுத்தம் செய்யும் உத்தம் ஜீவிகளாய் - நல் நித்திய வாழ்வினிலே அஹா அஹா ஆனந்தம் அஹா அஹா ஆனந்தம் அல்லேலூயா கீதம் பாடி மகிழ்வோம் - அன்பிலே
5. தோத்திரம் துதியுமக்கே - தேவா அன்பின் ஆழம் அறிந்து புகழ்வோம் ஆயத்தமுள்ளோர்க்கே - நீர் அருணோதயமாவீர் அஹா அஹா ஆனந்தம் அஹா அஹா ஆனந்தம் ஆ! ஆனந்தம் அல்லேலூயா பாடி - அன்பிலே