அன்பிதேனோ அன்பிதேனோ
anbidheno anbidheno
அன்பிதேனோ அன்பிதேனோ அன்னையே கூறும் - அன்பிதேனோ
1. அன்னையே பதில் கூறுமே யெனக்காக இத்தனை பாடதேன் அற்ப துாசியாமென்னைத் தேடி வந்ததேனையா - அன்
2. பரத்திலே சுர தூதரின் சுர மண்டலம் தோனி மத்தியில் நிர்ப்பந்தனா மேழையின் கூப்பிடுதல் கேட்டீரோ - அன்
3. துரோகியாய்க் கொடும்பாதையில் நடந்தோடியபெரும் பாவியை தூஷித்த இவ்வேழையை நேசித்தீரோ துய்யனே - அன்
4. மகிமையும் மகாமேன்மையும் கனமான நல்ல பதவியும் கிருபையாய் இவ்வேழைக்கு அளிக்க வந்தீரோ பரா - அன்
5. பூவிலே பெருங் கஷ்டமும் பசி தாகம் அவமானம் பாவியாம் இப்பேதைக்காய் தாங்கினீர் அன்பரே - அன்
6. தாய் தந்தை போலே தரித்து என் வேண்டுதல் யாவும் கேட்டுமே தாங்கியென்னை காத்தீரே அற்புத சொரூபனே - அன்
7. சோதனை மிகக் கூடினும் கடும் வேதனை மிகக் சூழினும் சொந்தமாக ஏற்றவர் தேற்றினார் என்னையும் - அன்