அன்பிதேனோ அன்பிதேனோ
anbidheno anbidheno
அன்பிதேனோ அன்பிதேனோ தந்தையே கூறுமே அன்பிதேனோ - 2
1. தந்தையே பதில்கூறுமே எனக்காக இத்தனைபாடதேன் - 2 அற்ப தூசியாமென்னை - 2 தேடி வந்ததேன் நாதா - 2
2. பரத்திலே சுரதூதரின் சுரமண்டலத்தொனி மத்தியில் - 2 நிர்ப்பந்தனா மேழையின் - 2 கூப்பிடுதல் கேட்டீரோ - 2
3. துரோகியாய்க் கொடும் பாதையில் நடந்தோடிய பெரும்பாவியை - 2 தூஷித்த இவ்வேழையை - 2 நேசித்தீரோ துய்யனே - 2
4. மகிமையும் மகா மேன்மையும் கனமான நல்ல பதவியும் - 2 கிருபையாய் இவ்வேழைக்கு - 2 அளிக்கவந்தீரோ பரா - 2
5. பூவிலே பெருங்கஷ்டமும் பசி தாகமும் அவமானமும் - 2 பாவியாம் இப்பேதைக்காய் - 2 தாங்கினீரோ அன்பரே - 2