அன்பென்னும் கொடையாய்
anbennum kodaiyaay
அன்பென்னும் கொடையாய் மனித வாழ்வை அழியா உறவில் இணைக்கும் பணியை இறைவாய் வாழ்ந்த இறை மைந்தனே எங்கள் அருள்வாழ்வு வழிகாட்டியே
உம்பணி வாழ்வையே எங்கள் அகராதி ஏற்று அயராது உழைப்போம் தளராது ஜெபிப்போம் -2
சிறைப்பட்டோர் விடுதலை அடைய வந்தீர் வரியவர் வாழ்வுக்கு வழிவகுத்தீர் -2 உலகின் இடங்களை வென்றிடவே இறை சித்தத்தில் நாளும் வாழ்ந்தவரே நற்செய்தி முழங்கி நம்பிக்கை வாழ்வில் புதிதாய் விலகி மாற்றினீரே
தந்தையின் அன்பினை பகிர்ந்தவரே இறை ஆவியின் ஏவுதல் நிறைந்தவரே -2 ஆயிரம் மாயிரம் புதுமைகளால் அன்று எளியவர் மனதை ஆட்கொண்டீர் வாழ்வெனும் கடலில் அன்பென்னும் படகாய் என்னிலே பரம்பொருளே