அன்பரின் நேசத்தைக் கண்டேன்
anbarin nesathaik kanden
அன்பரின் நேசத்தைக் கண்டேன் அளவில்லா ஆனந்தம் கொண்டேன் நான் பாடுவேன் நான் போற்றுவேன் நல்லவர் இயேசு என்று -அன்பரின்
1. சொந்த பந்தங்கள் வெறுக்கின்ற போது சோதனையாலே நான் சோர்கின்ற போது தஞ்சம் எங்கே நான் செல்வேனே என்று தவிக்கையில் என் இயேசு என்னைத் தேடிவந்தார் – அன்பரின்
2. யாருமில்லா அனாதை நான் என்றேன் யார் என் கண்ணீரை துடைப்பார்கள் என்றேன் என் மகனே என்றென்னேசு வந்தார் என் கரம் பிடித்து மார்போடு அணைத்தார் – அன்பரின்
3. கஷ்டப்படுவோர்க்கு துணையாரோ என்றேன் கடின வியாதிக்கும் சுகம் யாரோ என்றேன் உலகில் இருப்போனிலும் உன்னில் இருக்கும் – நானே கர்த்தர் பரிகாரி என்றேன் – அன்பரின்