அன்பரின் நேசம்
anbarin nesam
அன்பரின் நேசம் அளவிடலாகுமோ அந்நிய ரெம்மை அணைத்த பேரன்பே - அன்
அதிசயமாகவே ஆதியில் நினைந்து ஆதிபரனெமை அழைத்ததினாலே - அன்
மண்ணில் மாயக் கண்ணில் மாளா தெண்ணியே என்னைக் கண்ணீர் சொரிந்தார் - அன்
நித்திய மீட்பை நீ சருக்கீந்திட கெத்சமனேயில் கலங்கி வீழ்ந்திரோ - அன்
பிலாத்துவின் முன் பேதையெனக்காய் விலங்குடனேகி இலங்கலானீரோ - அன்
கள்வனென் நாமம் வள்ளலணிந்தீர் உள்ளம் உருகுதே உன்னத அன்பே - அன்
மூவுலகிறைக்கு முள்முடி தானோ தூசியெனக்கினி பொன்முடி யானோ - அன்
அன்பர் சேர்க்க வந்திடும் நேரம் இன்பமாய் என்னையும் ஏற்றுக்கொள்வாரா - அன்